வருணாசிரமப் பட்டியலில் இவர்கள் அவர்ணர்கள், நிறமற்றவர்கள், தீணடத்தகாதவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டனர். 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இவர்களுக்கு 'சுத்தமற்ற சாதிகள்' என்று பெயர் சூட்டியது. 1921 ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்களை 'அழுத்தப்பட்ட இனம்' என்றழைத்தது. 1931 கணக்கெடுப்பு இவர்களை 'புறசாதியினர'; என்றுக் குறிப்பிட்டது. சாதிப் படிநிலையமைப்பில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட தகுதியில்லாதவர்கள் என்ற போக்கு இந்தப் பெயரில் வெளிப்பட்டது. 1936 - ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 'பட்டியல் சாதியினர்' என்று அழைக்கப்பட்டனர் தீண்டப்படக் கூடாதவர்கள் என்ற இந்தப் பட்டியலில் 429 சாதிகள் அடங்கும். அதாவது 60 மில்லியன் இந்தியர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று இந்தப் பட்டியல் வரையறுத்தது. 1950 ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினர் என்ற பெயரே தக்கவைக்கப்பட்டது.
எங்கும் அன்பு மயம்! யாவரிலும் ஆனந்த மயம்! பகைமைக்கு பதில் மன்னிப்பு... மதங்களுக்கு மேல் மனிதநேயம்... வேற்றுமைகளைத் தாண்டி மனித மாண்பு... நமது அன்பாலே அனைத்தையும் புதுப்பிப்போம்.
Wednesday, September 29, 2010
சாதிய இந்தியா - 4 (தாழ்த்தப்பட்டவர்களின் இழிபெயர்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment