Wednesday, September 29, 2010

சாதிக் கிறித்தவம் - 3 (கிறித்தவர்களின் சாதிவெறி)

சாதிக் கிறித்தவம் - 3 (கிறித்தவர்களின் சாதிவெறி)

கிறித்தவ அதிகார வர்க்கத்தின் சாதி வெறி     மக்கள் மையத் திருச்சபை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் இன்றும் கிறித்தவம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் போன்றோரின் கண்ணசைவினைப் பொறுத்தே அசைந்து கொண்டிருக்கிறது. ஆகவே இவர்களையே கிறித்தவத்தின் அதிகார வர்க்கம் என்று எவ்வித தயக்கமுமின்றி இங்கு குறிப்பிடுகிறேன்.     சாதிப் புழுதியை தின்று கொழுத்து, முதலில் சாதிக்கும் பிறகு சாமிக்கும் துதிபாடும் கிறித்தவத்தின் அதிகார வர்க்கமே, சமத்துவ நாடகத்தின் உச்சகட்ட நடிகர்கள். விவிலியத்தைத் துருவித் துருவி ஆய்ந்த பின்னும் சாதி வெள்ளம் இவர்களில் பொங்கி வழிகிறது. இவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சாதி சமுதாயத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். ஏன், தங்கள் சாதியின் மரியாதைக்குரிய பிரதிநிகள் என்றும் தாராளமாகச் சொல்லலாம். சில வேளைகளில், மறைமாவட்டத்திலும் பங்குகளிலும் அரங்கேறும் சாதிப் பிளவுகளுக்கு மூல காரணிகளாக இருப்பவர்கள் இந்த இறைப்பணியாளர்களே.     தங்கள் சாதி வட்டத்திற்குள் மட்டும் கண்சிமிட்டும் ஆயர்கள், குருக்கள், கன்னியர், அருட்சகோதரர்கள் ஏராளம் சாதிக் களைகளை அறுத்தெறியத் தெரியாமல் அந்த பொறிக்குள் விழுந்து தடுமாறும் ஆயர்களின் கண்காணிப்பில் அவர்களுடைய சாதி ஆடுகள் மட்டுமே கொழுத்துக் கிடக்கின்றன. திருச்சபை வட்டத்திற்குள் குருத்துவ மற்றும் துறவற சபைகளில் உறுப்பினர்களை சேர்ப்பதும், பணித்தளங்களில் குருக்களை நியமிப்பதும், துறவற சபை தலைவர்களை நியமிப்பதும், நிர்வாகம் சார்ந்த பெரியப் பொறுப்புக்களை ஒப்படைப்பதும் பெரும்பாலும் சாதிய அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகின்றன.இனம் புரியாத அக்கறையோடு சாதிக் கோஷ்டிகளைச் சேர்க்கும் குருக்கள், துறவியர், குருமாணவர்கள், குறிப்பிட்ட சாதியனருக்கென்றே துவங்கப்பட்டத் துறவற சபைகள், குறிப்பிட்ட சாதியினருக்கென்றே புதிதாக உருவாக்கப்படும் மறைமாவட்டங்கள், பங்குகள், குறிப்பிட்ட சாதியினருக்கென்று ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், தனது பங்கைச் சார்ந்த தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை மதிப்பின்றி நடத்தும் குருக்கள், தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை அதிக நேரம் காக்க வைப்பது, சாமியார் இல்லை என்று உள்ளே இருந்து கொண்டே ஆணவமாய் சொல்லி அனுப்புவது, தேவையில்லாமல் அவர்களை திட்டித் தீர்ப்பது போன்றவை அதிக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.தலித் ஒருவர் ஆயராக நியமிக்கப்படுவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது. தமிழகத்திலும் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பிறகுதான் முதன்முதலாக வேலூரில் தலித் ஆயர் நியமனம் செய்யப்பட்டார்.ஏன் திருச்சபை சாதியத்தைப் ஏற்றுக் கொண்டு வந்துள்ளது என்ற விவாதத்தைப் பார்க்கும்போது, ஒரு உண்மை தெளிவாகப் புலப்படுகிறது. திருச்சபையில் அதிகாரத்தில் உள்ளவர்களும், திட்டங்களை உருவாக்குபவர்களும், இறையியலாளர்களும் உயர்த்திக் கொண்ட சாதியைச் சார்ந்தவர்கள். இதனால் அவர்கள் கிறித்தவராகவும், அதே சமயத்தில் சாதியின் பெயரால் தங்களை உயர்த்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருப்பதன் முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதே அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

பொதுநிலையினரின சாதிவெறி    

திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் (தி.ப. 2:42) தொடக்கக் காலத்தில் உச்சமடைந்த நம்பிக்கைக் கொண்டோரின் வாழ்க்கைநெறி இந்தியாவில் சாதி வெறியால் கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆதிக் கிறித்தவம் இறந்து சாதிக் கிறித்தவம் உயிர்த்தெழுந்ததால் சாதியின் சாட்சிகளாக பொதுநிலையினர் காட்சி தருகின்றனர்;. திருமண உறவு, குடியிருப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் இடம், பங்குகளிலும் மறைமாவட்டங்களிலும் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளைக் கைப்பற்றுவது போன்றவற்றில் சாதிஉணர்வு ஓங்கி நிற்கிறது.     குறிப்பிட்ட சாதியனருக்கென்றே ஒதுக்கப்பட்ட அன்பியங்கள், பங்குத் தந்தையை சாதியின் பெயரால் சொந்தம் கொண்டாடும் அல்லது விரட்டியடிக்கத் துடிக்கும் ஒரு வகையான வெறி, வழிபாடுகளிலும் திருவிழா நிகழ்வுகளிலும் தாழ்த்தப்பட்டோர் என முத்திரைக் குத்தி ஒதுக்கித் தள்ளும் நிலை, சாதிக்கொரு கல்லறைத் தோட்டம் கட்டி சில்லறை புத்தியைக் காட்டுவது, சாதிகொரு பங்கு, சாதிக்கொரு கோயில், ஆதிக்க சாதிக் கிறித்தவரின் ஆணவ மனநிலை, தலித் கிறித்தவரின் தாழ்வு மனப்பான்மை இவையெல்லாம் பொதுநிலையினரிடம் காணக்கிடக்கும் சாதி மனநிலையின் கோர முகங்கள்.ஜஐஅயபநஸஜஐஅயபநஸபுதுவை – கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த இறையூர் பங்கில் கிறித்தவ வன்னியர்களின் சாதிய அடாவடித்தனம், காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் கிறித்தவ ரெட்டியார்கள் தாழ்த்தப்பட்ட சமூகக் கிறித்தவர்களை தேவாலயத்தின் நுழைவாயில் வழியே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத கொடுமை, திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் மேட்டுப்பட்டி வன்னிய கிறித்தவருக்கும் தலித் கிறித்தவருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதல், திருச்சி மேலப்புதூர் பங்கிலுள்ள சாதிக்கல்லறைத் தடுப்புச்சுவர், பல பங்குகளில் சாதி வாரியாக திருவிழாக்கள், பாதங் கழுவுதல் சடங்கில் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் பங்கேற்கத் தடை, தேர் மற்றும் குருத்தோலைப் பவனிகள் தலித் கிறித்தவரின் பகுதிகளுக்கு செல்லாத நிலை போன்றவை பொதுநிலையினரிடம் அன்றாடம் காணக்கிடக்கும் சாதிய அவலங்கள்.

சாதிக் கிறித்தவம் - 2 (தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள்)



இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கவனமாக தாழ்த்தப்பட்ட மக்களை ஓரங்கட்டுவதை அதன் அதிகாரப் படிநிலைகளில் காணலாம். இந்தப் போக்கு இந்திய நிலபிரபுத்துவத்தையும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தையும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. 1991 ல் இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேராயர் ஜார்ஜ் சுர் பின்வருமாறுக் குறிப்பிட்டார். 'தென்னிந்தியாவில், 10 மில்லியன் கிறித்தவர்களில் 65 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த போதிலும் 4 சதவிகிதப் பங்குகளே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தக் குருக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில், 13 கத்தேலிக்க ஆயர்களில் எவரும் தலித் கிடையாது. மறைமாவட்ட முதன்மைக் குரு, குருமட அதிபர்கள், சமூக சேவை மையங்களின் பொறுப்பாளர்கள் இவர்களிலும் மேற்கூறப்பட்ட நிலையே நிலவுகிறது.'
                                  1995 மற்றும் 1998 களில் குரியன் என்பவரால் தலித் கிறித்தவர்கள் அதிகம் வாழுகின்ற இரண்டு கத்தோலிக்க மறைமாவட்டங்களில் (விஜயபுரம் மற்றும் பலாய்) நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மறைமாவட்டங்களின் நிர்வாகத்திலும் தலித் கிறித்தவர்களின் பங்கு மிகக் குறைவாகவேக் காணப்பட்டது கண்டறியப்பட்டது. தலித் சமூகத்தைச் சார்ந்த குருவானவர்களை அங்குப் பார்ப்பதும் அரிதாக இருந்தது. பலாய் மறைமாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த குரு எவருமே இல்லை. இது குருத்துவ நிலைக்கு ஆளெடுக்கும் அழைத்தல் முகாம்கள் மீது ஆழமானக் கேள்விகளை எழுப்புகிறது.
கிறித்தவ நிறுவனங்கள் தங்கள் புதிய கல்விமுறைகளால் ஆதிக்க சாதியினருக்கே கல்வித் தளத்தை பெருமளவில் தாரைவார்த்துவிட்டன. தாழ்த்தப்பட்ட, கடைநிலை சாதியினருக்கு கல்வியைக் கொண்டு சேர்ப்பதில் அதிக அளவில் உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
                  தலித் கிறித்தவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவமானமும் அடக்குமுறைகளும் கிறித்தவர்கள் மத்தியில் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் சிலுவைப் பாடுகள். இந்தியாவில் உள்ள மொத்தக் கிறித்தவர்களில் 75 விழுக்காடும், கத்தோலிக்கத் திருச்சபையில் ஏறத்தாழ 65 விழுக்காடும் தலித் கிறித்தவர்கள் உள்ளனர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதையின் மிகச் சிறந்த உதாரணம் தலித் கிறித்தவர்களே. ஆம், இந்து சமயத்தில் மனித மாண்பிழந்து அடிமைகளாய் கிடந்தவர்கள் விடுதலை வாழ்வை நம்பி கிறித்தவத்திற்கு கரைசேர்ந்த பின்னும் கிறித்தவத்திலும் இழிசாதியினர் என்ற முத்திரை தாங்கி அவமானத்தோடும் அவலத்தோடும் நடைபிணம் போல் வாழ்ந்து வருகின்றனர்.
                        ஆதிக்கக் கிறித்தவர்கள் தங்கள் கிறித்தவப் பெயருக்குப் பின் சாதிப் பெயரையும் குறிப்பிடுவதன் மூலம் நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கிடையாது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி சாதி உயர்நிலையினை நிலைநாட்டிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்களது சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டிருக்கலாம் என்றவாறு தங்களது சாதிப் பெயர்களின் மூலங்களை துருவித் துருவி ஆராய்ந்து நாங்களும் உயர்ந்தவர்களே, எங்கள் முன்னோரும் சமூக உயர்நிலையில் வாழ்ந்தவர்களே என்று பெருமைப்பட்டுக்கொள்ளத் துடிக்கிறார்கள். இது தங்களையும் உயர்த்;திக் கொண்ட சாதியினரின் வரிசையில் இனங்கண்டு கொண்டு மகிழ்வடையும் ஒருவகையான அணுகுமுறையே அல்லாமல் அடிப்படையில் உயர்வு- தாழ்வு என்ற அநீதத்தை சீண்டிப் பார்க்காமல் விட்டுவிடுகிறது.
                              சாதிக் கிறித்தவர்கள் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களை 'சோற்றுக் கிறித்தவர்கள்' என இழிவாகக் கருதுகின்றனர். இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கைத் தெளிவினால் அல்ல, பொருட்களுக்காகவே தாழ்ததப்பட்டவர்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறினார்கள் என உயர்த்திக் கொண்ட சாதியினர் பழிசுமத்துகின்றனர். தங்கள் சமூக நிலையை உயர்த்தவே இவர்களெல்லாம் மதம் மாறினார்கள் என்று குறைச்சொல்லப்படுகிறார்கள். இத்தகைய அவதூறுகள் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. இத்தகைய வேற்றுமை அடுத்திருக்கும் கிறித்தவரோடு நாம் கொள்ளும் உறவைப் பாதிக்கிறது. மதம் மாறினால் சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்பி மதம் மாறிய தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'மதமாற்றம் தீண்டத்தகாதவர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வராது' என அம்பேத்கார் கூறியிருப்பது, தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் மட்டில் உண்மையாகிப் போனது.

சாதிக் கிறித்தவம் - 1

          கிறித்தவத்தின் விடுதலைப் பொறிகளில் மனதைப் பறிகொடுத்த தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அகியவற்றிற்கான ஏக்கத்தால் கிறித்தவத்திற்கு தாவியது வரலாற்று உண்மை. ஆனால், ஆன்மாக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சாதியை ஒழிக்கும் விடுதலைச் செயல்களை மறந்தது கிறித்தவம். சாதியால் வஞ்சிக்கப்பட்ட மக்களின் சார்பாக சாதி ஒழிப்பு முயற்சியில் தனது இயலாமையைக் கிறித்தவம் காட்டிக் கொண்டிருப்பது இம்மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம். 'இந்திய சமூகம் சாதியை விட்டொழிக்க நினைத்தாலும் இந்தியத் திருச்சபையிலிருந்து ஒருபோதும் சாதியை ஒழித்துக் கட்ட முடியாது' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


           இந்தியாவிலேயேத் தோன்றிய, சமணமும், பௌத்தமும், பல சித்தர்களும,; சித்தாந்தங்களும் சாதியப் பாகுபாடுகளைக் கேள்விக்குட்படுத்தியதால் இருந்த இடம் தெரியாமல் துரத்தியடிக்கப்பட்டன. இந்த நிலையில், வெளியிலிருந்து குடியேறிய கிறித்தவம் தனது இருத்தலை இன்றுவரை இந்தச் சாதிய இந்தியாவில் தக்கவைத்துக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன? கல்வித்துறை, மருத்துவத்துறைப் போன்ற பல்வேறுத் துறைகளிலும் மற்றெல்லா சமயங்களையும் விட இன்றளவும் இந்த சாதிய இந்தியவில் கிறித்தவம் ஓங்கி நிற்கமுடிகிறது என்பதன் பின்னணிதான் என்ன? இந்தக் கேள்விகளின் தேடலில், கிறித்தவம் காலங்காலமாக சாதியத்தோடு கரம் கோர்த்து பயணித்து வருவதன் மெய்மைகள் நமக்கு விளங்கும்.
சுமார் 3500 ஆண்டுகளாக இந்திய மண்ணை சாதிப் புண்ணால் கறைபடுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சாதியத்துக்கும் கிடைத்த இன்னொரு அடிமை கிறித்தவம். சமத்துவத்தின் நற்செய்தியை வார்த்தையாலும் வாழ்க்கையாலும் ஆணித்தரமாக முழக்கமிட்ட இயேசுவின் பதிலாளாக விளங்க வேண்டியக் கிறித்தவம் இந்தியாவில் சாதிக் கட்டமைப்போடு கூட்டணி அமைத்துக் கொண்டு, இன்னொரு ஜென்மப் பாவத்தை தன்மேல் சுமத்தியுள்ளது. சாதியின் முன் கிறித்தவம் தலைவணங்கி நிற்கிறது.


சாதிய இந்தியா - 4 (தாழ்த்தப்பட்டவர்களின் இழிபெயர்கள்)

ஆதிக்க சாதியினர் தங்களுக்கு அதிகாரத் தொனியில் அழகழகாக பெயர் வைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் விரும்பியவாறெல்லாம் இழிவாகப் பெயரிட்டனர். தங்களுக்கென்று தாங்களே ஒரு பெயர் சூட்டிக் கொள்ளக்கூட முடியாதபடி மழுங்கடிக்கப்பட்ட இனம் இந்த தாழ்த்தப்பட்ட இனம். இவர்களை எப்படி அழைப்பது?
வருணாசிரமப் பட்டியலில் இவர்கள் அவர்ணர்கள், நிறமற்றவர்கள், தீணடத்தகாதவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டனர். 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இவர்களுக்கு 'சுத்தமற்ற சாதிகள்' என்று பெயர் சூட்டியது. 1921 ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்களை 'அழுத்தப்பட்ட இனம்' என்றழைத்தது. 1931 கணக்கெடுப்பு இவர்களை 'புறசாதியினர'; என்றுக் குறிப்பிட்டது. சாதிப் படிநிலையமைப்பில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட தகுதியில்லாதவர்கள் என்ற போக்கு இந்தப் பெயரில் வெளிப்பட்டது. 1936 - ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 'பட்டியல் சாதியினர்' என்று அழைக்கப்பட்டனர் தீண்டப்படக் கூடாதவர்கள் என்ற இந்தப் பட்டியலில் 429 சாதிகள் அடங்கும். அதாவது 60 மில்லியன் இந்தியர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று இந்தப் பட்டியல் வரையறுத்தது. 1950 ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினர் என்ற பெயரே தக்கவைக்கப்பட்டது.

இவற்றைத் தவிர்த்து பல தனிநபர்களும் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டினார்கள். குறிப்பாக, காந்தி இம்மக்களை அரிஜனங்கள் (கடவுளின் பிள்ளைகள்) என்றழைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பெயரைக் குறித்து தங்கள் அதிருப்தியை இன்றையக் காலக்கட்டத்தில் பெருமளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், கோவிலில் இருந்த பார்ப்பனக் குருக்களுக்கு தேவதாசிகள் பெற்றெடுத்தப் பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகள் எனப்பட்டனர். இத்தகைய தேவதாசி (தேவடியாள்) முறைக்குப் பெயர்போன இந்தியாவில், குறிப்பிட்ட மக்களினங்களை தேவனுடையப் பிள்ளைகள் என்று சொல்லும்போது அவர்களை 'தேவடியாப் பிள்ளைகள்' என்று காந்தி சொல்கிறாரா என்று விமர்சனங்கள் எழுகின்றன. தாங்கள் அரிஜனங்கள் என்று அழைக்கப்பட விரும்பாத இந்த மக்கள் தங்களது நிலையைத் தெளிவாக விளக்க 'தலித்' என்ற பெயரைப் பெருமளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

சாதிய இந்தியா - 3 (சாதிக்குள்ளே மட்டும் திருமணம்)

சாதியமும் அகமணமும்

        ஒருவர் தனது சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வரம்பினை சாதியம் தீர்மானித்துள்ளது. இந்த வரம்பினை தாண்டுபவர் யாராக இருந்தாலும் பல்வேறு தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும். ஒருவகையில், அகமணம் மட்டுமே சாதியின் சாரம்சமான ஒரேயொரு இயல்பு எனக் கூறி விடலாம். வேறு விதமாகக் கூறினால், கலப்பு மணம் இன்மையே (அகமணம்) சாதியின் சாராம்சமாக இருக்கிறது.
           சாதிக்கலப்புத் (சாதி எதிர்ப்பு) திருமணங்கள் செய்வோர் சாதி அல்லது குடும்ப கௌரவம் என்ற பெயரில் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இத்தகைய படுகொலைகள் மனதை உறுத்துகின்றன. அரசும் காவல்துறையும் இத்தகைய படுகொலைகளை மூடிமறைப்பதில் பெரிதும் துணைபோகின்றன.
          இத்தகைய படுகொலைகளைப் பற்றிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை பிரண்ட்லைன் இதழ் (ஆகஸ்டு, 2009) பிரசுரம் செய்துள்ளது. 14.11.2008 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் தந்தையால் இளம் பெண்ணும், அவளது காதலனும், காதலனுடைய சகோதரனும் படுகொலை திருவாரூர் மாவட்டத்தில் ஹரிதிவாரமங்கலம் கிராமத்தில் சிவாஜி என்ற தலித் இளைஞன் படுகொலை போன்றவை ஒரு சில உதாரணங்கள். இத்தகையப் படுகொலைகள் கட்டப்பஞ்சாயத்துகளின் கோர வெளிப்பாடுகளாக உள்ளன. சில பஞ்சாயத்துக்கள் இத்தகையப் படுகொலைகளை ஊக்கப்படுத்த தக்க சன்மானங்களை அறிவிப்பது மிருகத்தனமானது.
        சாதி இரத்தம் கலந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தகைய வன்முறையையும் கட்டவிழ்த்துவிட ஆதிக்க சாதியினர் தயங்குவதில்லை. தங்களது சாதிய சமூகத்தின் எல்லைகளை மீறித் திருமணம் செய்துகொள்வதென்பது மிகப்பெரியத் தண்டனைக்குரியக் குற்றமாகவே இன்றுவரை கருதப்படுகிறது.


சாதிய இந்தியா - 2 (தீண்டாமை)

தூய்மை – தீட்டுக் கருத்தியல்

       தூய்மை - தீட்டு என்ற கருத்தியல் சாதியப் படிநிலைக்கு அடிப்படையாக உள்ளது. இதுவே தீண்டாமை என்ற கருத்தியலுக்கும் இட்டுச் செல்கிறது. தாழ்த்தப்பட்டவர்களை கோவிலில் நுழைய விடாததற்கும் இதுவே காரணமாகிறது.
      தொட்டால் மட்டுமே தீட்டு உண்டாக்கக் கூடியவர்கள் தீண்டப்படத்தகாதவர்கள். ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்துவிட்டாலே தீட்டு உண்டாக்கக் கூடிய மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் நெருங்கத்தகாதவர்கள். நெருங்கத்தகாத சாதியைச்; சார்ந்த நாயாடிகள் என்பவர்கள் நாய்களைத் தின்னும் கீழ்சாதி இனத்தினர், பிச்சைக்காரக் கூட்டத்தினர் என்று மலபார் கையேடு ஒன்று பதிவுச் செய்துள்ளது. இவர்களைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பவர்கள் பார்க்கத்தகாதவர்கள். பார்க்கத்காதவர்கள் எனக் கூறப்படும் திருநெல்வேலி மாவட்டத்தைச சார்ந்த புரத வண்ணார்கள் எனும் சாதியினர்க்கு பகலில் நடமாட அனுமதியில்லை. குகைகளில் வாழும் கரடி, புலி போன்ற காட்டு விலங்குகளைப் போல் பகல் முழுவதும் உள்ளே அடைந்துக் கிடந்து இரவில் மட்டுமே அவர்கள் வெளியே வர அனுமதி உண்டாம்.
           'இந்து நாகரீகத்தால் சமூகத் தொழுநோயாளிகளாக மாற்றப்பட்ட 'தீண்டத்தகாதவர்கள்' என்ற இந்த நற்பேறு பெற்ற உயிர்களுக்குத்தான் எவ்வளவு பெரிய இழிவு! தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுவதே பெரும் அவப்பேறு. அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படத்தகாதவன் என்கிற அவமானத்தைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையானது என்னுடையக் கருத்துப்படி வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரிகத்தைப் பற்றி தீண்டத்தகாதவன் என்ன சொல்வான்? இது நாகரிகம் அல்ல, நயவஞ்சகம் என்று அவன் சொன்னால் தவறா?'ஜ16ஸ என்று அம்பேத்கர் விமர்சித்தார்.
      தீண்டத்தகாத சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுப் படிநிலையை உருவாக்கி அவர்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்தும் வெறியை சாதியம் கொடுத்திருக்கிறது. இது, சாதியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி.ஜ17ஸ எடுத்துக்காட்டாக, தேனி மாவட்டம கோட்டூர் என்ற கிராமத்திற்கு நான் களப்பணி அனுபவத்திற்காக சென்றிருந்தபோது அங்கிருந்த அருந்ததி இன மக்களை பறையர் இன மக்கள் ஆதிக்க மனநிலையோடு நடத்துவதை என்னால் கண்டுணர முடிந்தது. இதைப் போலவே, குஜராத்தில் வாங்கர் எனப்படும் தீண்டத்தகாத சாதியினர் தங்களை மற்றெல்லா தீண்டத்தகாத சாதிகளையும் விட மேலானவர்களாகக் கருதி ஆதிக்க மனநிலையோடு நடந்துக் கொள்கின்றனர். சாமர்கள், பங்கிஸ் போன்றத் தீண்டத்தகாத சாதியினர் மேல் இந்த வாங்கர் சாதியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
          இந்த மடமையைக் கண்டு நொந்துப்போன செபாஸ்டியன் காப்பன் என்னும் இந்திய இறையியலாளர், 'நீதிக்கும் அன்புக்குமான தேடலோடு முரண்பட்டு நிற்கும் தூய்மை - தீட்டு சட்டங்கள் வெறும் மனித உருவாக்கமே. அவை எந்த அளவுக்கு மனிதர்களை நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்கிறது என்பதைப் பொறுத்து அவற்றைக் கடைபிடிக்கலாம் அல்லது தூக்கி எறியலாம்' என்று கூறியுள்ளார்.



சாதிய இந்தியா - 1

                அறுபது வயதுப் பெரியவரை ஆறே வயது நிரம்பியச் சிறுவன் தான் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக 'யோவ் ஆறுமுகம் இங்க வாயா' என்று எந்தவொரு உறுத்தலுமின்றி உரக்கக் கூப்பிடுவதன் நியாயம் என்ன? 'என்னங்க சாமி' என்று எந்தவொரு வருத்தமுமின்றி கூனிக் குறுகி நிற்கும் அந்தப் பெரியவரின் சுயஉணர்வு மழுங்கிப் போனதன் காரணம்தான் என்ன? மனித மலத்தைக் கையால் அள்ளி மலத்தோடு மலமாய் குறிப்பிட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் நாறச்செய்தவன் எவன்? படிச்சாலும் காசுபணம் சம்பாதிச்சாலும் நீங்க அந்தப் பயலுகதானே என்ற ஆணவத்தைக் கற்பித்தவன் யார்? எல்லாத் தளங்களிலும் குறிப்பிட்ட மக்கள் காலங்காலமாக ஒரங்கட்டப்படுவதன் நியதி என்ன? மாண்பும், மானமும், உழைப்பும், உயிரும் சாதியத்தால் சூறையாடப்பட்டு சூம்பிக் கிடக்கும் பலரது வாழ்வுக்கு நானும் நீயும் தரும் பதிலென்ன? இந்தக் கேள்விகளின் தேடல்கள் இந்தியாவை ஒரு சாதிய இந்தியாவாக இனங்கண்டு கொள்ள நம்மை உந்தித் தள்ளுகிறது.


    
சாதியம் - ஒரு தெளிவானப் புரிதல்

            'சாதி என்பது மிகப் பெரிய பிரச்சனை. இப்பிரச்சனையை அதன் முழுமையில் என்னால் விளக்கிவிட முடியாது. அந்த அளவுக்கு சிக்கலானது'  என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை, சாதியக் கட்டமைப்பின் நாடி நரம்புகளை ஆழமாகத் தேடிப் பயணித்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் உண்மையானவை. அந்த அளவுக்கு சாதியின் வேர்கள் நமது வாழ்வின் ஒட்டுமொத்தத் தளங்களையும் சுற்றி வளைத்துள்ளன.
        சாதியக் கூறுகள் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்ற பொதுவானக் கூறுகள் கிடையாது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளில்தான் சாதிய இறுக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் சாதியத்தின் இறுக்கம் கடுமையாகக் காணப்படுகிறது. எந்த அளவுக்கு இந்தியர்கள் சாதியத்தை உள்வாங்கி; ஒருவர் மற்றவரிடமிருந்து சிதறுண்டுக் கிடக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட சாதிகளாக மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட சாதியினராக பிளவுபட்டுக் கிடக்கின்றனர்.
         சாதி ஒரு இந்திய நிகழ்வு, இந்து சமய நிகழ்வு என வாதிடும் முனைவர் கோ. கேசவன் அவர்கள், 'சாதி, மனித குலத்துக்கே பொதுவானது என்பதாகவும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியது என்பதாகவும் சொல்ல முடியாதபடி சில பிரதேசங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே தோன்றி திடப்பட்ட ஒன்றாக உள்ளது' என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
        சாதி என்பது அடிப்படையில் என்ன என்ற தேடலில், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாதபடி  எல்லாத் தளங்களிலும் பரந்து காணப்படுகிறது. ஒவ்வொரு வரையறையிலும் வாழ்வின் ஒருக் குறிப்பிட்டத் தளம் அழுத்தம் பெறுவதைக் காணமுடிகிறது. பலர் பொருளாதாரத் தளத்தை மையப்படுத்தி சாதியை வரையறைச் செய்கின்றனர். சாதியக் கட்டமைப்பு என்பது அடிப்படையில் ஒரு பொருளாதாரச் சுரண்டலே. இந்தச் சுரண்டலின் தவிர்க்க முடியா விளைவுகள் சமூக, சமய மற்றும் பல்வேறு தளங்களில் பரந்துக் கிடக்கிறது.
      சாதியத்தின் பொதுவானத் தன்மைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம். பிறவியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுதல், அதாவது பாரம்பரியத் தொழில் கையளிக்கப்டுதல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே திருமண உறவுகளை வைத்துக் கொள்ளுதல், சமூகம் முழுமைக்கும் மேலிருந்து கீழ்வரை ஒரு படிநிலைமுறையை அமைத்துக் கொள்ளல், சமூகம் முழுமைக்கும் தூய்மை - தூய்மையற்றத்தன்மை ஆகியவற்றை உருவாக்குதல்.


வருணாசிரமம் வகுத்த சிரமம்
          எந்த ஒருக் கட்டமைப்பையும் நிலைநிறுத்துவதற்கு அதற்கு சாதகமானக் கருத்தியல்கள் துணைபோகின்றன. சாதியக் கட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மனுசாஸ்திரம்தான் அதற்கானக் கருத்தியலைத் தருகிறது.
           சாதியத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததன் மிகப் பெரிய பாவம் மனு என்பவரையே சாரும். மனுசாஸ்திரம் என்று அழைக்கப்படும் அவரது சட்டப் புத்தகம்தான்  இந்துக்களுடைய மிகவும் அதிகாரப் பூர்வமானச் சட்டப்புத்தகமாகும். மனு நால்வர்ண நிறுவனத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கிறார். நான்கு வர்ணங்களுக்கான சட்டத்தை வகுத்தளிப்பதே மனுவினுடைய முதன்மையான நோக்கமாகத் தெரிகிறது.
         சிந்தனையில் ஆழ்ந்திருந்த மனுவிடம் சென்ற மாமுனிவர்கள் அவரை வணங்கி 'தெய்வீக அற்றலே, சாதிகள் (நான்கு முதன்மை சாதிகள்) ஒவ்வொன்றினுடைய புனிதச் சட்டங்களையும் சரியாகவும் முறையாகவும் எங்களுக்கு அருள்வாயாக' என்றுக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனு கொடுத்தச் சட்டங்கள்தான் மனுசாஸ்திரமாகப் போற்றப்படுகிறது. சாதியத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் மனுவின் கூற்றுக்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்..
       சாதியக் கட்டமைப்பை பாதுகாத்துப் பேணுவது அரசனின் தலையாயக் கடமையாகும். சாதி மீறுவது மிகப் பெரியக் குற்றமாகும். அதற்காக கடுமையானத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தண்டனைக் கொடுக்கத் தவறினால் எல்லா சாதிகளும் நாசமுறும். சாதிகளின் எல்லைகள் கடக்கப்படும். சாதியை மீறுபவர்கள் சரியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவர்களின் வாரிசு உரிமையைப் பறிக்க வேண்டும்.
        வருணாசிரமம் என்னும் கோட்பாடுதான் சாதியப் பாகுபாடு, சாதியப் படிநிலை அமைப்பு, தீண்டாமை போன்றவற்றின் கருத்தியல் அடிப்படையைத் தருகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களை கற்பிக்கும் வருண நெறிமுறை தொடக்கத்தில் தொழில் பிரிவின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஆக்கப்பட்டது. 'வருணம் பிறப்புரிமையாக, பரம்பரை உரிமையாக ஆக்கப்பட்டது பார்ப்பனியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அம்பேத்கார் குறிப்பிடுகிறார்.
        நான்கு வரணங்களுக்குள்ளும் உயர்வு தாழ்வு படிநிலை அமைப்பை நிலைநிறுத்திய வருணாசிரமம், இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் இடம் பெறத் தகுதியில்லாதவர்களாக, புறம்பானவர்களாக, விலங்குகள் நிலையினும் தாழ்த்தப்பட்டவர்களாக சில குறிப்பிட்ட மக்கள் சமூகங்களை ஒதுக்கித் தள்ளியது. ரிக் வேதம் வருணத்தவர் என ஆரியரை மட்டுமே குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் வருணநெறிப் பிரிவுகளில் இடம் பெறாதவர்களை பஞ்ச ஜனம் - அதாவது 5-வது மக்கள் கூட்டம் எனத் தாழ்வாகக் குறிப்பிடுகிறது. பிறப்பின் அடிப்படையில் தொழில், தனது பிரிவுக்குள் மட்டும் திருமண உறவு, உயர்வு தாழ்வு படிநிலை அமைப்பு போன்ற வருணாசிரமத்தின் மிக இறுக்கமான போக்குகள் சாதியத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தன.
        'தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ்சாதி மக்கள், தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்தன்மை அடைந்தவர்கள், அவர்கள் கடவுளாலேயே அப்படியே பிறப்புவிக்கப்பட்டவர்கள், அதற்கு மதங்களும் மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும், கடவுள் செயலையோ மதவிதிகளையோ யாரும் மறுக்கக் கூடாது என்றும், அவை மாறுதலுக்குக் கட்டுப்பட்டவை அல்ல என்றும் சொல்லக் கூடிய ஒரு பலமான வருணாசிரம தர்ம அஸ்திவாரத்தின் மீது சாதிக் கட்டப்பட்டுள்ளது' என பெரியார் மிக அழுத்தமாகக் கூறுகிறார்.    





Hindu Fundamentalism


A systematic agenda against religious harmony in India
Hindu fundamentalism is basically a religious fundamentalism. It is in the name of God and in the name of religion the Hindu fundamentalism instills hatred in the minds of the Hindus against Muslims and Christians. Hence, the multi – religious atmosphere guaranteed by the articles 25,26,27 and 28 of the Indian Constitution is at the verge of death. Hindutva has a systematic agenda to promote religious disharmony.

Alienation of the Muslims and Christians in India
            Hindu fundamentalism does not consider the Muslims and Christians who are living in India as the Indian citizens. The following reasons are given for why they do not belong to the Hindu – Fold: Hindu blood does not flow in their veins, they do not appreciate and practice the Hindu customs, they follow different faith and customs, they do not accept Sanskrit as their language, they consider Mecca and Jerusalem as their holy cities.
Moral obligations of every Hindu
            All those who have the privilege of being in the Hindu race, professing Hindu faith and practicing Hindu culture must contribute to the establishment of Hindu Rastra. Every Hindu has the moral obligation to…
v  Get united and fight against the non – Hindus.
v  Forcefully convert the non – Hindus to Hinduism in order to glorify the Hindu race and culture.
v  Demolish the places of worship of the non – Hindus. E.g. The demolish of Babri Masjid
v  Reject the pluralistic culture
v  Treat Muslims and Christians as subordinates, underclass, the other, and as 2nd class citizens.
Thus, according to the Hindu fundamentalism, human dignity is to be given only to the Hindus. The ontological dignity of the Muslims and Christians in India is thus violated.
Violence against the Muslims and Christians in India
The Indian history witnesses how Hindu fundamentalism has expressed its hatred towards Muslims and Christians through a serial of bloodsheds. Muslims are the primary targets of Hindutva but at the same time it has mercilessly attacked the Christians also in several incidents.

Cannibalistic attitude towards the Muslims
The demolition of Babri Masjid on Dec 6, 1992 gave a grave shock to the Muslims. Disregarding the feelings of the Muslims Mr. Advani considered the demolition of Babri Masjid [6]“as an act of God; an act of national pride”.
Another unforgettable trauma for the Muslims is their victimization in Gujarat in 2002. Tehelka Investigation reports how Hindu fundamentalists [7]“found a pregnant woman by name Kauser Banu and tore her stomach with a knife; they pierced the baby with the knife; crushed it on the ground; threw it on the flames”. All is because they were Muslims. It is very shocking to see Hindu fundamentalists acting worse than the wild animals. Thus there is total negation of every possibility for the religious harmony in India.

Targeting the Christians
            Christians seen as excluded from the Hindu – Fold are subject to all kinds of violence. The United Christians Forum for Human Rights complained, [8]“Nuns have been raped, priests executed, Bibles burnt, Churches demolished, educational institutions destroyed and religious people harassed in India”. Recent attacks on Christians in Orissa stands as a clear witness to the violence against the Christians.


What are our responses and initiatives to build up a harmonious India?




Thursday, September 16, 2010

கிறித்தவ தம்பதியினரின் திருமண வாழ்வு (Family life of the Christians)


 முன்னுரை
                 தம்பதியினரின் முழுமையான திருமண அன்புறவு, நலமான குடும்பத்திற்கான மிக முக்கியமான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது. முழுமையான திருமண அன்பில் ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொள்ளுதல், நலமான தாம்பத்ய உறவு, பொறுப்புள்ளப் பெற்றோர்களாக விளங்குவது ஆகியவை அடிப்படைகளாகும். இந்த அடிப்படைகளே பல குடும்பங்களில் ஆட்டம் காணுகின்ற சூழலை நாம் காண்கிறோம். இதற்கானக் காரணங்களை நமது கிராமச் சூழலில் ஆய்வு செய்து, கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினைகளின் ஒளியில் முழுமையானத் திருமண அன்பை வலியுறுத்துவதன் மூலம் நலமானக் கிறித்தவக் குடும்பங்களைக் கட்டியெழுப்ப இந்த ஆய்வுக் கட்டுரை அழைப்பு விடுக்கிறது.

1. சந்திக்கும் சவால்கள்
                                   எல்லோருடைய திருமண வாழ்விலும் ஏதாவது  பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. என் மனைவிதானே, என் கணவன்தானே, என் பிள்ளைதானே என்று ஒருவரையொருவர் அவரவர்களுடைய பலவீனங்களோடும் பலங்களோடும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதில்தான் திருமண வாழ்வின் அழகே இருக்கிறது. பல தம்பதியினரும் பலவாறு நொந்து கொள்வதை நம்மால் காண முடிகிறது. அவற்றுள் சிலவற்றை நாம் கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.
  •   இதுதான் திருமண வாழ்வென்றால் நிச்சயமாகத் திருமணம் செய்யாமலேயே இருந்திருப்பேன். காதலித்து அந்த ஆளைத் திருமணம் செய்தேன். ஆனால் இப்போது மற்றப் பொம்பளைங்கப் மேலப் பைத்தியமாக அலையிறாரு. என் தங்கச்சிக்கிட்டேயே தப்பாக நடக்கப் பார்க்கிறார்.
  • என் பொண்டாட்டிக்கு தாம்பத்திய உறவில் அறவே நாட்டம் கிடையாது.
  • தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார். இப்பதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறார். குடித்துவிட்டு வந்து தினம்தினம் அடிக்கிறார். என் மானம்  போகுது தினம்தினம்! பாழாப்போனவரு பிள்ளைங்க பக்கத்துலப் படுத்துக்கிட்டு இருக்கும்போதே என்னைத் தொந்தரவு செய்கிறார். மாமனாருக்கிட்;டப் பேசினாக்கூட சந்தேகப்பட்டு அடிக்கிறாரு, உதைக்கிறாரு. குழந்தைகளைக் கண்டாலே எரிஞ்சு விழுகிறார். வேலைக்குப் போக மாட்டேன்கிறார். விடியவிடிய டி.வி.யில ஏதேதோப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
  • என்னை என் மனைவி மதிக்கவே மாட்டேங்கிறாள். எதை செய்தாலும் சந்தேகப்படுகிறாள்.
  • நீதானேப் பொம்பளப் புள்ளையா பெத்துப்போட்ட இப்ப அனுபவி என்று பொறுப்பற்று நடக்கிறார்.
  • எங்க அம்மாக்கிட்டப் பேசவே விடமாட்டேங்கிறாள். தங்கச்சி வீட்டுக்கு போக விடமாட்டேங்கிறாள்.
  • தாம்பத்ய உறவென்ற பெயரில் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார். ஒருநாள்கூட எனது உடல்நிலையையோ, விருப்பத்தையோ கேட்டது கிடையாது. பிள்ளைங்கச் சொல்லு கேட்க மாட்டேங்குது. அப்பனைப்போலத் தறிக்கெட்டுப் போச்சுங்க.
  • வீட்டுக்கு வந்தா நாலு வார்த்தை அன்பா பேச அவளுக்குத் தெரியாது. ஏதாவதுச் சொல்லி பிரச்சனைய ஏற்படுத்துறா.
  • குடிச்சுக்கிட்டுக் கூட்டாளிகளை கூப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துக் கண்ட கதையெல்லாம் பேசுறாரு இதனால எவ்வளவோ பிரச்சனைத் தெரியுமா? வேலைக்குப் போகலைன்னாலும் திட்டுகிறார் வயலுக்கு வேலைக்குப்போயிட்டு அவசரஅவசரமாக வீடு வந்தாலும் எவனோடப் பேசிக்கிட்டு வர்றன்னு அடி உதை.
  • இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகு இவரோடஃ இவளோட நான் வாழணுமா?
2. பிரச்சனைகளுக்கானக் காரணங்கள்
               இத்தகைய பிரச்சனைக்கானக் காரணங்கள் பலவாக இருந்தாலும் தம்பதியனரின் திருமண அன்புறவு குறிப்பாக, ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ளாததும், தாம்பத்ய உறவு சரியில்லாததும், பொறுப்பற்ற பெற்றொர்களாக இருப்பதும் மிக முக்கியமானக் காரணங்களாகும்.

Ø      குடும்பத்தில் ஆணாதிக்கப்போக்கு
                              மனைவி எனக்கு எல்லா விதத்திலும் கட்டுப்பட்டவள். ஆம்பளச்சொன்னா பொறுத்துப் போக வேண்டியதுதானே? ஆம்பளைங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க. ஆமா ஒரு குழந்தையைப் பெற்றுத்தர இவளுக்கு வக்கில்ல போன்ற இறுக்கமானப் போக்குகள்.
Ø      திருமணம், தாம்பத்ய உறவு பற்றியத் தெளிவானப் புரிதலின்மை
                           பாலுணர்வை வெளிப்படுத்த மட்டுமே திருமணம் மாமன் மகனுக்கு     பிறந்தவுடனே சொந்தமாகிப்போகும் பெண்கள் திருமணம் என்பது உடலை மட்டுமே சார்ந்தது என்ற மனநிலை.
Ø      குழந்தைப் பேறின்மை
                           பெண்களை பழிசொல்லும், கேலிசெய்யும் சமுதாயம் இதனால், மனவிரக்தி, வாழ்வே அர்த்தம் இழந்ததுபோல் உணர்வு
Ø      துணைவி, துணைவரின் உடல், உணர்வு பற்றிப் போதிய அறிவின்மை
                           என்னுடைய ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு வடிகால் பெண்ணின் உடல் பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல் என்னயிருந்தாலும் பொம்பளத்தானே! மாதவிடாய் காலத்தில் தீட்டு
Ø      திரைப்படம், தொடர்கள் தாக்கம்
                           திருமணத்தின் புனிதத்தன்மை கேலிக் கூத்தாக்கப்படுகிறது (11 – ம் பத்தி நாதர்) கணவனா? மனைவியா? ஜெயிக்கப்போவது யாரு? ஒருவரையொருவர் தோற்கடித்தல், பழிவாங்குதல், இழிவுபடுத்துதல்.
Ø      எதற்கெடுததாலும் சந்தேகம்
                         வேண்டுமென்றே நன்றாக சமைக்க மாட்டேங்கிறாய் எங்கேப் போயிருக்கிறாள்? எதுக்கு அவளோட சிரித்துப் பேசினீங்க?
Ø      தாம்பத்திய உறவில் யாராவது ஒருவருக்கு நாட்டமின்மை
Ø      குழந்தைகள் மேல் அக்கறையின்மை
                        வேலைக்குப் போறதில்லை. போனாலும் கிடைக்கும் காசைக் குடித்து விரயமாக்குதல் தேவையின்றி அதிகமாகக் குழந்தைகளிடம் கோப்படுவதும் அடிப்பதும்

3. நலமான குடும்ப வாழ்விற்கான நல்ல தெளிவுகள்
                     எல்லோரும் வாழ்வை நிறைவாகப் பெறவேண்டும் (யோவா 10:10) என்பது கிறித்தவராகிய நம் ஒவ்வொருவரின் இலக்கு. இந்த இலக்கினை திருமண வாழ்வில் கிறித்தவர்கள் பெற சில தெளிவானப் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.


3.1. சரியான தாம்பத்திய உறவு
                           தாம்பத்ய உறவு பற்றியத் தெளிவானப் பரிதல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு வழிசெய்யும் என்பதில் சந்தேகமில்லை. தாம்பத்ய உறவு இயற்கையானது, கடவுள் கொடுத்தக் கொடை, அடிப்படைத் தேவை திருமணத்தின் நோக்கம்: ஒருவருடைய பாலுணர்வை முறையாக முழுமையாக வெளிப்படுத்தும் தளம்.

3.1.1. இரண்டாம் வத்திக்கான் சங்கம்  (இன்றைய உலகில் திருச்சபை)
                   தாம்பத்ய உறவில் திருமண அன்பு சிறப்பாக வெளிப்படுகிறது. மனிதத் தன்மையோடு கூடிய அன்பு இது.
3.1.2. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
                  அழிக்க முடியாத, பிராமணிக்கமானத் தற்கையளிப்பு. பாலுணர்வை முறையாகக் கையாளுவதன் மூலமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான்.
3.1.3. ஆறாம் பவுல்
                   இது உடலைக் கையாளுதல் மட்டுமல்ல. அப்படிச் செய்வதன் மூலமாக மற்றவரின் மதிப்பு, சுதந்திரம், மாண்பு போன்றவற்றை புரிந்து நடக்கிறீர்கள்
3.2 பொறுப்புள்ளப் பெற்றோர்
                  குடும்ப வாழ்வின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று குழந்தைகள் மேல் பெற்றோர் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு.
3.2.1 இரண்டாம் வத்திக்கான் சங்கம்  (இன்றைய உலகில் திருச்சபை)
                   கடவுளின் படைப்பிலும் அன்பிலும் பெற்றொர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே, கடவுள் உலகைப் பேணி வளர்க்கவும் செய்கிறார் என்பதால் இவர்கள்  குழந்தைகளைப் பேணி வளர்ப்பதிலும் பொறுப்பள்ளவர்கள் என நான் கருதுகிறேன். எனவே, கடவுளே எதிர்பார்க்கும் பொறுப்பு இது. குழந்தைகள் ஏதோ கடவுள் வானத்திலிருந்து தூக்கிப்போடப்பட்டவர்கள் அல்ல. உங்களது திருமண அன்பினால் பிறந்தவர்கள். குழந்தைகளின் ஆன்மீக, உலகக் காரியங்களில் பெற்றோர் அக்கறைக் கொள்ள வேண்டும். தந்தை சம்பாதித்துப் போட்டால் மட்டும் போதாது. குழந்தை வளர்ப்பில் உடனிருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு மிக முக்கியம். குழந்தைகளை அவரவர் அழைத்தலில் ஆழப்படுத்த வேண்டும். எந்த அழைப்பையும் அவர்கள் மேல் திணிக்கக்கூடாது.
3.2.2 ஆறாம் பவுல்
                            தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியினர் தாங்கள் பொறுப்புள்ளப் பெற்றோர்கள் என்ற உணர்வு நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3.2.3 இரண்டாம் ஜான்பால்
                              பெற்றோர்கள் கடவுளுடைய வேலையைக் நம் கண்கள் காணுகின்ற அளவுக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்சள்.
3.3 முழுமையான திருமண அன்புறவு                       சந்தேகம், அடித்தல், உதைத்தல், விவாகரத்து போன்றவற்றின் அடிப்படைக் காரணம் கணவன் மனைவிக்கிடையே முழுமையான திருமண அன்புறவு இல்லாமையே. அன்புறவு இல்லாத வெறும் உடலுறவு பலாத்காரமே.

3.3.1 உண்மையான அன்பு
  •  அடுத்தவரின் தனித்தன்மையை பாதுகாத்தல்.
  • அடுத்தவரை மதித்தல், பொருட்படுத்துதல்.
  • தான் மட்டுமே என்ற நிலையைக் கைவிடல்.
3.3.2 ஓப்பந்தமல்ல உடன்படிக்கை பந்தம் (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)
                        இதுவரை சமாளித்ததேபோதும்! இவரோட, இவளோட வாழணும்னு என் தலைவிதியா என்ன? என்ற போக்கினைக் கைவிட வேண்டும் ஏனென்றால் திருமணம் ஒர ஒப்பந்தமல்ல மாறாக ஒரு உடன்படிக்கை பந்தம். திருமணம் என்னும் அடையாளத்தால் கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர்கள். இரண்டு நபர்களின் தற்கையளிப்பு, நிபந்தனை அற்றது, வியாபாரமல்ல மாறாக இலாப நஷ்டங்களைப் பார்க்காதது, இறப்பினாலன்றி முறிவுபடாதது, கடவுளே இந்த உடன்படிக்கை உறவுக்கு சாட்சி. திருமணம் என்பது உறவில் உருவாகி, உறவை வளர்க்கும் அன்பு மற்றும் உயிர்ச் சமூகம்.
3.3.3 இரண்டாம் ஜான்பால்
                            எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணைவிஃதுணைவர் ஒரு நபர் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். முழுமைப்படுத்தும் அன்பே தவிர படிநிலை அன்பல்ல ஆம்பள ஏதாவதுச் செய்தால் பொறுத்துப்போ என்பதெல்லாம் முறையல்ல. தம்பதியினரின் அன்பு கடவுளின் அன்பிலும் வாழ்விலும் சிறப்பாகப் பங்கு பெறுகிறது.

முடிவுரை                      இன்றைய உலகப் போக்குகள் (குறிப்பாக, திரைப்படக் கலாச்சாரம்) குடும்ப வாழ்வை சீரழிக்காதவாறுப் கவனமாக இருக்க வேண்டும். சிறுசிறு செயல்களாலும் வார்த்தைகளாலும் தம்பதியர் ஒருவர் மற்றவர் மீதுள்ள அக்கறையையும் அன்பையும் தாராளமாக வெளிப்படுத்ததும்போது குடும்ப வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாகிறது. ஒருவர் மற்றவருடைய மாண்மையும் உரிமையையும் மதித்துப் பேணி திருச்சபையின் படிப்பினைகளின் ஒளியில் குடும்ப வாழ்வில் நிறைவாழ்வை ஒவ்வொரு கணமும் அனுபவித்து இன்புற வேண்டும். மற்ற குடும்பங்களுக்கு முன்மாதிரியாகவும் சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களாகவும் ஒவ்வொரு தம்பதியினரும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளும்  ஒளி வீசும் போது ஒவ்வொரு குடும்பமும் இறைவனின் அன்புக்கு இவ்வுலகில் நிறைவாக சான்று பகரும் என்பதில் சந்தேகமில்லை.

AIDS in India and our Response

CONTENTS
                                                                           
Introduction        
1. An understanding of AIDS
            1.1 AIDS – an Indian reality                    
            1.2 The nature of the disease
                        1.2.1 The incubation period
                        1.2.2 Affecting the Human Immune System
            1.3 Ways of contracting and diagnosing AIDS
           
2. Economic Impact of AIDS in India
            2.1 A Demand for a High Investment
            2.2 A Decline in the Working Population
            2.3 Loss of employment and income
           
3. Social Impact of AIDS in India
            3.1Ontological Dignity of the victims
            3.2 Disintegration of the families

4. A collective and sincere response
            4.1 Responsibility of the Indian Government
            4.2 Non-Governmental Organizations (NGOs):
            4.3 A Christian response  
Conclusion
Bibliography

Introduction        
            My concern here is to present how India would encounter a very critical situation socially and economically if serious and sincere endeavours are not made immediately in tackling with the issue of AIDS. The fact that AIDS accounts for 2 percent of all the deaths in India is truly tormenting.[1] The inhuman treatment subjected to the HIV infected persons and the bewildering threat of AIDS in declining the Indian economy calls for true commitment and responsibility of every Indian. Therefore, engaging the analytical method in this assignment, I analyse and prove how AIDS has become a serious threat to the social and economic reality of India.

1. An understanding of AIDS
            It is worthy to note here that AIDS is one of the greatest concerns of the entire humanity today. As we come to learn that there is no cure possible so far but only preventive measures are available for AIDS provokes a serious concern of everyone.

1.1 AIDS – an Indian reality                    
HIV infection in India was first identified in 1986 among female prostitutes working in Chennai. The first case of clinical AIDS was noted in Bombay in 1986. In the year 1987, AIDS was diagnosed in two Indians in Vellore who had never traveled to a foreign country.[2] India overtakes South Africa as having the world's highest number of people with HIV\AIDS, an estimated 5.7 million.[3] Migration and mobility, unsafe sex and low condom use, lower state of women, poverty are some of the factors contributing to the spread of AIDS in India.

1.2 The nature of the disease
            "AIDS - Acquired Immune Deficiency Syndrome is a condition in which the in-built defense system of the body breaks down completely. This phenomenon is gradual, but ultimately leads to total depletion of a very important cell component of the immune mechanism. Those affected are thus unable to combat commonly known diseases like pneumonias, diarrhoeas, tuberculosis and even common colds; ultimately they die due to one or another of these infections."[4]
1.2.1 The incubation period
The virus of AIDS, called HIV (Human Immuno-deficiency Virus) infects parsons in many ways but does not produce illness for a very long time.[5] This time interval between the exposure to HIV infection and the manifestation of the disease syndrome is called the incubation period.
1.2.2 Affecting the Human Immune System
            AIDS destroys the very system designed to ward off invading organisms. HIV incubates within the skin, eyes, brain, spinal cord, nervous system, bone marrow, heart, lungs, muscles, liver, pancreas, kidneys and other vital organs.[6] There is no way to reconstitute the human immune system.

1.3 Ways of contracting and diagnosing AIDS
            Some of the confirmed ways of contracting the disease could be enumerated as follows, through sexual intercourse which could be immoral in many cases, Transfusion of contaminated blood, Improper use of common blade, Injecting by a contaminated needle etc.
The most commonly test used is ELISA - Enzyme Linked Immuno Sorbant Assay. The approximate cost per test is Rs.40.There are also confirmatory tests like Western Blot, Immuno Fluorescence assay (IFA), radio-immuno assay (RIA). In India ELISA is the most widely used test with the Western Blot as a confirmatory test.

2. Economic Impact of AIDS in India
One of the reasons that in a way forces countries like India to tackle with the issues of AIDS is that it has a drastic impact on the economy of the nation. In India the cost of deaths caused by AIDS , which includes the cost of prior illness, hospital beds, health workers' time, family members' time and energy, lost income opportunities, lost educational opportunities, creation of widows, orphans, impoverishment of communities etc., can be estimated in billions of dollars.[7]
            A study of Asia Pacific International Herald Tribune concluded that the annual average GDP growth rate - currently 8% was likely to decline by about 1% over the next 10 years if nothing was done to stem the epidemic.[8]

2.1 A Demand for a High Investment
Investments in the strategies for prevention and control programmes such as Promotion of safe sex behaviour, condom use, management of the Sexually transmitted disease, massive public education programmes have so much of economical implications. Even where HIV prevalence rates are low costs of extensive prevention programmes are likely to stretch already overburdened budget beyond their limit.[9]
            HIV affects the total savings of the nation. When there is a decline in the savings, there will be less investment, less productive employment, lower incomes, a slow rate of GNP growth and possibly a lower level of GNP.[10]

2.2 A Decline in the Working Population
            HIV results in higher morbidity and higher mortality in particular age groups. It reduces the working population. What is more worrisome is the fact that an overwhelming majority of AIDS patients are between 20 to 40 years of age.[11] They are the most productive group, economically and reproductively, a fact which imparts an extraordinary significance to AIDS.

2.3 Loss of employment and income
            There are many reasons that account for the loss of employment for the people living with AIDS. The fear of facing others, a feeling of depression, loss of strength and absenting often on account of medical care cause them the loss of employment.
In a household study on India, 36% of the people living with HIV and AIDS who were able to retain their job reported an income loss with the average of 9 %. Among those who lost their employment the income loss was severe at about 66%. Medical expenditure accounts for 11% of the total expenditure in the household. [12]
           
3. Social Impact of AIDS in India
          AIDS has given a lion’s share in making the Indian society unhealthy. The society finds it very difficult to accept the people living with AIDS. Even the hospitals hesitate to treat the cases of HIV and AIDS. The inhuman treatment forced upon the HIV infected ones pose basic questions on their human dignity. Increase of poverty, blackmailing to inject the contaminated blood, prejudices over the affected ones, distrust of the spouses are some of the social offshoots of AIDS.

3.1Ontological Dignity of the victims
Stigma towards people infected with HIV/AIDS is widespread. The misconception that AIDS only affects men who have sex with men, sex workers, and injecting drug users strengthens and perpetuates existing discrimination. The most affected groups, often marginalized, have little or no access to legal protection of their basic human rights. The shame, blame, fear, distrust, disgust and dangers that surround the issues, of AIDS and the difficulties of discussing them in Indian cultures is a major problem facing the society today. [13]
Women face greater risk of rejection, ostracism and neglect. In many cases, the burdens of costs, care of the infected fall upon the women.   
           
3.2 Disintegration of the families
Family, the basic unit of our society is at stake.  The HIV epidemic causes immense psycho-social and economic pressure on the families.[14] Many families may disintegrate under the stain. The children of AIDS victims have a future replete with confusion and questions. The increase of widows disturbs the parents and relatives.

4. A collective and sincere response
          The plight caused by AIDS calls for a collective and sincere response. The government, Non-governmental organizations, People Welfare Movements and the individuals have to respond to the problem together. We should meet the cost of it together.
            Individuals should be self- disciplined to prevent the spread of AIDS. This requires a behavioral change. Creating awareness and addressing the human rights violations are extremely important to the fight against AIDS.

4.1 Responsibility of the Indian Government
Mr.Sadiq Ahmed, World Bank Acting Chief Economist has warned India that failure to control the epidemic at lower levels will have serious economic consequences[15]. India has to concentrate deeply on the concerns of promoting awareness on the disease with the understanding that the situation requires prevention.
India continues to respond to the issue in many ways.. In July, 1992 Constitution of the National AIDS Control Organization (NACO) was constituted. Oct, 1992 Indian Concil of Medical Research established the National AIDS Research Institute (ICMR).
 India receives technical assistance and funding from a variety of UN partners and bilateral donors. But it needs to expand the participation of other sectors, increase safe behavior and reduce stigma associated with HIV-positive people among the population.
4.2 Non-Governmental Organizations (NGOs):
There are numerous NGOs working on HIV/AIDS issues in India at the local, state, and national levels. Their projects include targeted interventions with high risk groups, direct care of people living with HIV/AIDS, general awareness campaigns; and care for AIDS orphans.
4.3 A Christian response  
            If Theology is an account of hope, the issue of AIDS is a clarion call to prove it. The Catholic Church has singled out from the Vatican AIDS Conference to the efforts of the local churches, in a concerted call to compassion.[16] "Where sin abounds, the grace abounds yet more" (Rom 5:21). Darkness yields to hope because the sorrow of those who suffer this disaster is met by the sorrow of God. The divine will to share, to be a companion in suffering and dying, revealed in the empathy of Jesus. This calls ultimately for Church's empathy for AIDS patients.

Conclusion
            As we are aware of the threat of AIDS to the social and economic welfare of India, we must take up new strategies of promoting awareness of this monster. The ontological dignity of every HIV infected brothers and sisters of our nation should be equally respected. Blindly ignoring this issue can never create a better India rather it would worsen the plight further. Let all the religions and people welfare movements join hands for a sincere response to this big threat so that our nation would have a better social and economic situation.
































BIBLIOGRABHY
A. Books
Antonio, Gene. AIDS: Rage & Reality. Dallas: Anchor Books, 1993.
Bhaskara Rao, Dr. Digumarti Ed. HIV/AIDS - Socio-Economic Realities. New Delhi: Discovery Publishing House, 2000.
D'Cruz, Premilla .Family Care in HIV/AIDS. New Delhi: SAGE Publications, 2004.
Pavri, Khoshed M. Challenge of AIDS. New Delhi: national Book Trust India, 1992.
B. Articles
Gowley, Paul G. "Rahner's Christian Pessimism: A Response to the Sorrow of AIDS". In Theological Studies 58/2 (June,1997).p.286-307.

C. Electronic Document: From Internet
Amella Genlleman, Study of Asia- Pacific International herald Tribune , available at http: www.nytimes/2006/07/20/world/asia/20 int - India - 2250219.html, Internet











[2] Dr. Charles Gilks, "Impact in the Health System in India", in HIV/AIDS - Socio-Economic Realities, Dr. Digumarti Bhaskara Rao, ed.,  (New Delhi: Discovery Publishing House, 2000),p.140.
[3] Amella Genlleman, Study of Asia- Pacific International herald Tribune , available at http: www.nytimes/2006/07/20/world/asia/20 int - India - 2250219.html, Internet.
[4] Khosed M.Pavri, Challenge of AIDS (New Delhi: National Book Trust India, 1992), p.1
[5] Ibid.p.8
6 Gene Antonio, AIDS: Rage & Reality (Dallas: Anchor Books, 1993), p.21. Ibid.p.21. Khoshed M.Pavri, Challenge of AIDS, ibid. ps.35-41.





[7] Peter Godwin, "The Socio-Economic Effects of HIV/AIDS", in HIV/AIDS - Socio-Economic Realities, Dr. Digumarti Bhaskara Rao, ed.,  (New Delhi: Discovery Publishing House, 2000),p.13.
[8] Amella Genlleman, Study of Asia- Pacific International herald Tribune , ibid., Internet.
[9] Peter Godwin, "The Socio-Economic Effects of HIV/AIDS",ibid., p.2.
[10] Des Cohen, "The Economic Impact of the HIV epidemic", in HIV/AIDS - Socio-Economic Realities, ibid.,p. 57.
[11] Khoshed M.Pavri, Challenge of AIDS, ibid. p19.

[13] Peter Godwin, "The Socio-Economic Effects of HIV/AIDS",ibid., p.18.
[14] Ibid., 19.
[16] Paul G.Gowley, "Rahner's Christian Pessimism: A Response to the Sorrow of AIDS", Theological Studies 58/2 (June,1997),p.288.