Thursday, September 16, 2010

கிறித்தவ தம்பதியினரின் திருமண வாழ்வு (Family life of the Christians)


 முன்னுரை
                 தம்பதியினரின் முழுமையான திருமண அன்புறவு, நலமான குடும்பத்திற்கான மிக முக்கியமான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது. முழுமையான திருமண அன்பில் ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொள்ளுதல், நலமான தாம்பத்ய உறவு, பொறுப்புள்ளப் பெற்றோர்களாக விளங்குவது ஆகியவை அடிப்படைகளாகும். இந்த அடிப்படைகளே பல குடும்பங்களில் ஆட்டம் காணுகின்ற சூழலை நாம் காண்கிறோம். இதற்கானக் காரணங்களை நமது கிராமச் சூழலில் ஆய்வு செய்து, கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினைகளின் ஒளியில் முழுமையானத் திருமண அன்பை வலியுறுத்துவதன் மூலம் நலமானக் கிறித்தவக் குடும்பங்களைக் கட்டியெழுப்ப இந்த ஆய்வுக் கட்டுரை அழைப்பு விடுக்கிறது.

1. சந்திக்கும் சவால்கள்
                                   எல்லோருடைய திருமண வாழ்விலும் ஏதாவது  பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. என் மனைவிதானே, என் கணவன்தானே, என் பிள்ளைதானே என்று ஒருவரையொருவர் அவரவர்களுடைய பலவீனங்களோடும் பலங்களோடும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதில்தான் திருமண வாழ்வின் அழகே இருக்கிறது. பல தம்பதியினரும் பலவாறு நொந்து கொள்வதை நம்மால் காண முடிகிறது. அவற்றுள் சிலவற்றை நாம் கீழ்கண்டவாறு குறிப்பிடலாம்.
  •   இதுதான் திருமண வாழ்வென்றால் நிச்சயமாகத் திருமணம் செய்யாமலேயே இருந்திருப்பேன். காதலித்து அந்த ஆளைத் திருமணம் செய்தேன். ஆனால் இப்போது மற்றப் பொம்பளைங்கப் மேலப் பைத்தியமாக அலையிறாரு. என் தங்கச்சிக்கிட்டேயே தப்பாக நடக்கப் பார்க்கிறார்.
  • என் பொண்டாட்டிக்கு தாம்பத்திய உறவில் அறவே நாட்டம் கிடையாது.
  • தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார். இப்பதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறார். குடித்துவிட்டு வந்து தினம்தினம் அடிக்கிறார். என் மானம்  போகுது தினம்தினம்! பாழாப்போனவரு பிள்ளைங்க பக்கத்துலப் படுத்துக்கிட்டு இருக்கும்போதே என்னைத் தொந்தரவு செய்கிறார். மாமனாருக்கிட்;டப் பேசினாக்கூட சந்தேகப்பட்டு அடிக்கிறாரு, உதைக்கிறாரு. குழந்தைகளைக் கண்டாலே எரிஞ்சு விழுகிறார். வேலைக்குப் போக மாட்டேன்கிறார். விடியவிடிய டி.வி.யில ஏதேதோப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
  • என்னை என் மனைவி மதிக்கவே மாட்டேங்கிறாள். எதை செய்தாலும் சந்தேகப்படுகிறாள்.
  • நீதானேப் பொம்பளப் புள்ளையா பெத்துப்போட்ட இப்ப அனுபவி என்று பொறுப்பற்று நடக்கிறார்.
  • எங்க அம்மாக்கிட்டப் பேசவே விடமாட்டேங்கிறாள். தங்கச்சி வீட்டுக்கு போக விடமாட்டேங்கிறாள்.
  • தாம்பத்ய உறவென்ற பெயரில் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார். ஒருநாள்கூட எனது உடல்நிலையையோ, விருப்பத்தையோ கேட்டது கிடையாது. பிள்ளைங்கச் சொல்லு கேட்க மாட்டேங்குது. அப்பனைப்போலத் தறிக்கெட்டுப் போச்சுங்க.
  • வீட்டுக்கு வந்தா நாலு வார்த்தை அன்பா பேச அவளுக்குத் தெரியாது. ஏதாவதுச் சொல்லி பிரச்சனைய ஏற்படுத்துறா.
  • குடிச்சுக்கிட்டுக் கூட்டாளிகளை கூப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துக் கண்ட கதையெல்லாம் பேசுறாரு இதனால எவ்வளவோ பிரச்சனைத் தெரியுமா? வேலைக்குப் போகலைன்னாலும் திட்டுகிறார் வயலுக்கு வேலைக்குப்போயிட்டு அவசரஅவசரமாக வீடு வந்தாலும் எவனோடப் பேசிக்கிட்டு வர்றன்னு அடி உதை.
  • இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகு இவரோடஃ இவளோட நான் வாழணுமா?
2. பிரச்சனைகளுக்கானக் காரணங்கள்
               இத்தகைய பிரச்சனைக்கானக் காரணங்கள் பலவாக இருந்தாலும் தம்பதியனரின் திருமண அன்புறவு குறிப்பாக, ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ளாததும், தாம்பத்ய உறவு சரியில்லாததும், பொறுப்பற்ற பெற்றொர்களாக இருப்பதும் மிக முக்கியமானக் காரணங்களாகும்.

Ø      குடும்பத்தில் ஆணாதிக்கப்போக்கு
                              மனைவி எனக்கு எல்லா விதத்திலும் கட்டுப்பட்டவள். ஆம்பளச்சொன்னா பொறுத்துப் போக வேண்டியதுதானே? ஆம்பளைங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க. ஆமா ஒரு குழந்தையைப் பெற்றுத்தர இவளுக்கு வக்கில்ல போன்ற இறுக்கமானப் போக்குகள்.
Ø      திருமணம், தாம்பத்ய உறவு பற்றியத் தெளிவானப் புரிதலின்மை
                           பாலுணர்வை வெளிப்படுத்த மட்டுமே திருமணம் மாமன் மகனுக்கு     பிறந்தவுடனே சொந்தமாகிப்போகும் பெண்கள் திருமணம் என்பது உடலை மட்டுமே சார்ந்தது என்ற மனநிலை.
Ø      குழந்தைப் பேறின்மை
                           பெண்களை பழிசொல்லும், கேலிசெய்யும் சமுதாயம் இதனால், மனவிரக்தி, வாழ்வே அர்த்தம் இழந்ததுபோல் உணர்வு
Ø      துணைவி, துணைவரின் உடல், உணர்வு பற்றிப் போதிய அறிவின்மை
                           என்னுடைய ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு வடிகால் பெண்ணின் உடல் பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல் என்னயிருந்தாலும் பொம்பளத்தானே! மாதவிடாய் காலத்தில் தீட்டு
Ø      திரைப்படம், தொடர்கள் தாக்கம்
                           திருமணத்தின் புனிதத்தன்மை கேலிக் கூத்தாக்கப்படுகிறது (11 – ம் பத்தி நாதர்) கணவனா? மனைவியா? ஜெயிக்கப்போவது யாரு? ஒருவரையொருவர் தோற்கடித்தல், பழிவாங்குதல், இழிவுபடுத்துதல்.
Ø      எதற்கெடுததாலும் சந்தேகம்
                         வேண்டுமென்றே நன்றாக சமைக்க மாட்டேங்கிறாய் எங்கேப் போயிருக்கிறாள்? எதுக்கு அவளோட சிரித்துப் பேசினீங்க?
Ø      தாம்பத்திய உறவில் யாராவது ஒருவருக்கு நாட்டமின்மை
Ø      குழந்தைகள் மேல் அக்கறையின்மை
                        வேலைக்குப் போறதில்லை. போனாலும் கிடைக்கும் காசைக் குடித்து விரயமாக்குதல் தேவையின்றி அதிகமாகக் குழந்தைகளிடம் கோப்படுவதும் அடிப்பதும்

3. நலமான குடும்ப வாழ்விற்கான நல்ல தெளிவுகள்
                     எல்லோரும் வாழ்வை நிறைவாகப் பெறவேண்டும் (யோவா 10:10) என்பது கிறித்தவராகிய நம் ஒவ்வொருவரின் இலக்கு. இந்த இலக்கினை திருமண வாழ்வில் கிறித்தவர்கள் பெற சில தெளிவானப் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.


3.1. சரியான தாம்பத்திய உறவு
                           தாம்பத்ய உறவு பற்றியத் தெளிவானப் பரிதல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு வழிசெய்யும் என்பதில் சந்தேகமில்லை. தாம்பத்ய உறவு இயற்கையானது, கடவுள் கொடுத்தக் கொடை, அடிப்படைத் தேவை திருமணத்தின் நோக்கம்: ஒருவருடைய பாலுணர்வை முறையாக முழுமையாக வெளிப்படுத்தும் தளம்.

3.1.1. இரண்டாம் வத்திக்கான் சங்கம்  (இன்றைய உலகில் திருச்சபை)
                   தாம்பத்ய உறவில் திருமண அன்பு சிறப்பாக வெளிப்படுகிறது. மனிதத் தன்மையோடு கூடிய அன்பு இது.
3.1.2. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
                  அழிக்க முடியாத, பிராமணிக்கமானத் தற்கையளிப்பு. பாலுணர்வை முறையாகக் கையாளுவதன் மூலமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான்.
3.1.3. ஆறாம் பவுல்
                   இது உடலைக் கையாளுதல் மட்டுமல்ல. அப்படிச் செய்வதன் மூலமாக மற்றவரின் மதிப்பு, சுதந்திரம், மாண்பு போன்றவற்றை புரிந்து நடக்கிறீர்கள்
3.2 பொறுப்புள்ளப் பெற்றோர்
                  குடும்ப வாழ்வின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று குழந்தைகள் மேல் பெற்றோர் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு.
3.2.1 இரண்டாம் வத்திக்கான் சங்கம்  (இன்றைய உலகில் திருச்சபை)
                   கடவுளின் படைப்பிலும் அன்பிலும் பெற்றொர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே, கடவுள் உலகைப் பேணி வளர்க்கவும் செய்கிறார் என்பதால் இவர்கள்  குழந்தைகளைப் பேணி வளர்ப்பதிலும் பொறுப்பள்ளவர்கள் என நான் கருதுகிறேன். எனவே, கடவுளே எதிர்பார்க்கும் பொறுப்பு இது. குழந்தைகள் ஏதோ கடவுள் வானத்திலிருந்து தூக்கிப்போடப்பட்டவர்கள் அல்ல. உங்களது திருமண அன்பினால் பிறந்தவர்கள். குழந்தைகளின் ஆன்மீக, உலகக் காரியங்களில் பெற்றோர் அக்கறைக் கொள்ள வேண்டும். தந்தை சம்பாதித்துப் போட்டால் மட்டும் போதாது. குழந்தை வளர்ப்பில் உடனிருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு மிக முக்கியம். குழந்தைகளை அவரவர் அழைத்தலில் ஆழப்படுத்த வேண்டும். எந்த அழைப்பையும் அவர்கள் மேல் திணிக்கக்கூடாது.
3.2.2 ஆறாம் பவுல்
                            தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியினர் தாங்கள் பொறுப்புள்ளப் பெற்றோர்கள் என்ற உணர்வு நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3.2.3 இரண்டாம் ஜான்பால்
                              பெற்றோர்கள் கடவுளுடைய வேலையைக் நம் கண்கள் காணுகின்ற அளவுக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்சள்.
3.3 முழுமையான திருமண அன்புறவு                       சந்தேகம், அடித்தல், உதைத்தல், விவாகரத்து போன்றவற்றின் அடிப்படைக் காரணம் கணவன் மனைவிக்கிடையே முழுமையான திருமண அன்புறவு இல்லாமையே. அன்புறவு இல்லாத வெறும் உடலுறவு பலாத்காரமே.

3.3.1 உண்மையான அன்பு
  •  அடுத்தவரின் தனித்தன்மையை பாதுகாத்தல்.
  • அடுத்தவரை மதித்தல், பொருட்படுத்துதல்.
  • தான் மட்டுமே என்ற நிலையைக் கைவிடல்.
3.3.2 ஓப்பந்தமல்ல உடன்படிக்கை பந்தம் (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)
                        இதுவரை சமாளித்ததேபோதும்! இவரோட, இவளோட வாழணும்னு என் தலைவிதியா என்ன? என்ற போக்கினைக் கைவிட வேண்டும் ஏனென்றால் திருமணம் ஒர ஒப்பந்தமல்ல மாறாக ஒரு உடன்படிக்கை பந்தம். திருமணம் என்னும் அடையாளத்தால் கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர்கள். இரண்டு நபர்களின் தற்கையளிப்பு, நிபந்தனை அற்றது, வியாபாரமல்ல மாறாக இலாப நஷ்டங்களைப் பார்க்காதது, இறப்பினாலன்றி முறிவுபடாதது, கடவுளே இந்த உடன்படிக்கை உறவுக்கு சாட்சி. திருமணம் என்பது உறவில் உருவாகி, உறவை வளர்க்கும் அன்பு மற்றும் உயிர்ச் சமூகம்.
3.3.3 இரண்டாம் ஜான்பால்
                            எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணைவிஃதுணைவர் ஒரு நபர் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். முழுமைப்படுத்தும் அன்பே தவிர படிநிலை அன்பல்ல ஆம்பள ஏதாவதுச் செய்தால் பொறுத்துப்போ என்பதெல்லாம் முறையல்ல. தம்பதியினரின் அன்பு கடவுளின் அன்பிலும் வாழ்விலும் சிறப்பாகப் பங்கு பெறுகிறது.

முடிவுரை                      இன்றைய உலகப் போக்குகள் (குறிப்பாக, திரைப்படக் கலாச்சாரம்) குடும்ப வாழ்வை சீரழிக்காதவாறுப் கவனமாக இருக்க வேண்டும். சிறுசிறு செயல்களாலும் வார்த்தைகளாலும் தம்பதியர் ஒருவர் மற்றவர் மீதுள்ள அக்கறையையும் அன்பையும் தாராளமாக வெளிப்படுத்ததும்போது குடும்ப வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாகிறது. ஒருவர் மற்றவருடைய மாண்மையும் உரிமையையும் மதித்துப் பேணி திருச்சபையின் படிப்பினைகளின் ஒளியில் குடும்ப வாழ்வில் நிறைவாழ்வை ஒவ்வொரு கணமும் அனுபவித்து இன்புற வேண்டும். மற்ற குடும்பங்களுக்கு முன்மாதிரியாகவும் சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களாகவும் ஒவ்வொரு தம்பதியினரும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளும்  ஒளி வீசும் போது ஒவ்வொரு குடும்பமும் இறைவனின் அன்புக்கு இவ்வுலகில் நிறைவாக சான்று பகரும் என்பதில் சந்தேகமில்லை.

1 comment: